LATEST NEWS
ரகசியமாக நிச்சயதார்தம் முடிந்த நடிகை காஜல் அகர்வால்..! மாப்பிள்ளை யார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்
தென்னிந்தியவின் பிரபல நடிகைகளுள் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு 35 வயதாகிவிட்டது. முக்கியமாக இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. அதோடு மேக்கப் போடாமலும் அழகாக காட்சியளிக்கும் நடிகைகளுள் ஒருவரும் கூட. இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார்.
பழனி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் தமிழில் நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில், அகர்வாலின் மெழுகு உருவம் மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. நடிகை காஜல் அகர்வாலுக்கு இந்த லாக்டவுன் சமயத்தில் ரகசியமாக திருமண நிச்சயதார்தம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாக்டவுன் முடிந்ததும் காஜலின் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மணமகனின் பெயர் கவுதம் என்றும் அவர் தொழிலதிபர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதேவேளை, தற்போது காஜல் அகர்வால் துல்கர் சல்மானுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹேசினாமிகா என்கிற மாஸ்டர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
