தண்ணீர் பைப்பில் ஜாலியாக விளையாடிய சிறுவன்… அம்மாவோட சப்தம் கேட்டதும் செஞ்ச செயல பாருங்க, சிவாஜியே தோத்துருவாரு போலருக்கே..! – cinefeeds
Connect with us

LifeStyle

தண்ணீர் பைப்பில் ஜாலியாக விளையாடிய சிறுவன்… அம்மாவோட சப்தம் கேட்டதும் செஞ்ச செயல பாருங்க, சிவாஜியே தோத்துருவாரு போலருக்கே..!

Published

on

குழந்தைகளின் உலகம் மிக, மிக அலாதியானது. வாயில் இருந்து தவற விடும் வார்த்தைகள்கூட குழந்தைகளால் அழகாகிறது. அதனால்தான் அவைகூட ரசிக்க முடிகிறது.

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

Advertisement

குழந்தைகள் என்னவோ எப்போதும் விளையாடிக் கொண்டும், செல்போனில் கேம்ஸ், வீடியோக்கள் பார்க்கவும் தான் விரும்புகின்றனர். ஆனால் பெற்றோர்கள் தான் அவர்களிடம் மிகவும் கண்டிப்புடன் நடந்துகொள்கின்றனர். இங்கேயும் அப்படித்தான் ஒரு மூன்ற் வயதே ஆன பொடியன் வீட்டின் பின்பகுதியில் இருக்கும் தண்ணீர் குழாயில் தண்ணீரை திறந்து வைத்துக்கொண்டு கையை நனைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஜாலியாக விளையாடிக் கொண்டே இருக்கும்போது அவரது அம்மா வீட்டின் உள்ளே இருந்து குழந்தையின் பெயரை சொல்லி அழைக்கிறார். அடுத்த நொடி அந்த பொடிக்குழந்தை பைப்பை அடைத்துவைத்துவிட்டு ஓடிப்போய் இயற்கை உபாதை கழிப்பதுபோல் நடிக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்கள். நடிப்பில் இந்த பொடியனின் செவ்வாலியே சிவாஜி கணேசனே தோற்றுவிடுவார் போலிருக்கிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in