தளபதி விஜயுடன் மோத தயாராகும் உலகநாயகன் கமலஹாசன்!! – cinefeeds
Connect with us

LifeStyle

தளபதி விஜயுடன் மோத தயாராகும் உலகநாயகன் கமலஹாசன்!!

Published

on

தளபதி விஜயுடன் மோத தயாராகும் உலகநாயகன் கமலஹாசன்!! அதிர்ச்சியில் ரசிகர்கள் !! உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தற்போதைய திரைப்படம் விக்ரம். மாஸ்டர் கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலை சென்று பார்த்து கதை ஒன்றை சொல்ல அவருக்கு மிகவும் பிடித்துப் போக இவர் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்க ரஜினி நடிப்பதாக இந்த படம் முதலில் தயாரானது ஆனால் ரஜினி இந்த படத்தை கை விட்ட நிலையில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தார் அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு ஜல்லிக்கட்டு படத்திற்காக தேசிய விருதை வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைத்திருக்கிறார் ஏற்கனவே இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் கோவை பாண்டிச்சேரி சென்னை என பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக படபிடிப்பு நடந்து முடிக்கப்பட்டுள்ளது ஜனவரி 31-ஆம் தேதி ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்யும் படக்குழுவினர் இந்த திரைப்படத்தை தமிழ் வருடப் பிறப்பன்று வெளியிட திட்டம் தீட்டியுள்ளனர்.

Advertisement

ஏற்கனவே தமிழ் வருடப்பிறப்பிற்காக காத்திருக்கிறது பீஸ்ட் திரைப்படம். உலக நாயகன் கமல் மற்றும் தளபதி விஜய் நடித்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப் பட்டால் என்ன நடக்கும் என்பது இதுவரை யாரும் கண்டதில்லை ஏற்கனவே அஜித் மற்றும் ரஜினி ஆகியோர் பொங்கலின் போது விசுவாசம் மற்றும் பேட்டை திரைப்படத்தின் மூலம் மோதியது குறிப்பிடத்தக்கது இப்பொழுது விஜய் மற்றும் கமல் கூறினால் யார் வெற்றி பெறுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in