LATEST NEWS
தவெக அரசின் அதிரடி ‘ஆக்ஷன்’..! போலீஸ் அகாடமிக்கு தூக்கியடிக்கப்பட்டாரா அருண் ஐபிஎஸ்..? பின்னணி என்ன..?!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை காவல் ஆணையராகப் பணியாற்றிய அருண் ஐபிஎஸ், முந்தைய அரசுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாகக் கருதப்பட்டார். இவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் உள்ளிட்ட தன்னை எதிர்த்த பலர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. இதற்கு நீதிமன்றமும் அப்போது கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, அருண் ஐபிஎஸ் முதலில் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், பல்வேறு புகார்களுக்கு உள்ளான ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையின் உயர் பதவியில் அமர்த்துவது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியிலிருந்து அருண் ஐபிஎஸ் தற்போது அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஊனமாச்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக மகேஸ்வரி என்பவர் புதிய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். அருண் ஐபிஎஸ் மீது எழுந்த தொடர் புகார்கள் காரணமாகவே முதலமைச்சர் விஜய் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
