LATEST NEWS
நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..? அடேங்கப்பா பேட்ரூம் மட்டும் இத்தனையா!!
கவுண்டமணி செந்தில் தொடங்கி தற்போது உள்ள சிறு நகைச்சுவை நடிகர்களில் வரை என்றுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு
தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முக்கிய ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதுமட்டுமல்லாமல் சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து நம்மை மகிழ வைத்து வருகிறார் நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது. கோலாமாவு கோகிலா படத்தில் அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மீது காதல் வயப்பட்டத்தை அனைவரும் பார்த்து ரசித்தனர்.
சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது கர்ணன், டிக்கிலோனா, பிஸ்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் காமெடி நடிகரான யோகி பாபுவின் பிரமாண்ட அழகிய வீட்டை இதுவரை நாம் யாராவது பார்த்து இருக்கிறோமா, இதோ புகைப்படங்களுடன்…



