புஷ்பா படத்தில் தமிழர்களை இழிவு படுத்துனார்களா?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

புஷ்பா படத்தில் தமிழர்களை இழிவு படுத்துனார்களா??

Published

on

புஷ்பா படத்தில் தமிழர்களை இழிவு படுத்துனார்களா?? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சமூக அமைப்பினர்!!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பல திரைப்படங்களை தடை செய்யக்கோரி அமைப்புகள் போர்க்கொடி தூக்கி வருகின்றது. சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது ஆனால் அதில் தனிப்பட்ட ஒரு சமூகத்தினரை இழிவு படுத்துவதாக கூறி அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது இதனால் அந்த திரைப்படம் ஒரு காட்சியைக் கூட நீக்கியுள்ளனர்.

அதேபோன்று மானாடு திரைப்படத்திலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக போர்க்கொடி தூக்கியது அமைப்பு ஆனால் படம் திரையிட்ட பின்பு அந்த திரைப்படத்தை கொண்டாடியது. இதே போல் பல நிகழ்வுகளை நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம் விஜய் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது அப்பொழுது அந்தத் தலைப்பின் கீழ் டைம் டு லீட் என்ற வாசகத்தை நீக்கிய பின்னரே அந்த திரைப்படம் திரைக்கு வந்தது.

Advertisement

அதேபோல் விஸ்வரூபம் திரைப்படம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் வெளியானது தற்போது புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றிருந்தது அதில் ஆரம்பக் காட்சியில் செம்மர கடத்தல் பற்றியும் தமிழக காவல்துறை பற்றியும் மக்களை பற்றியும் இழிவாக சித்தரிப்பதாக மறுமலர்ச்சி முன்னேற்ற முண்ணனி சார்பில் வழக்கு ஒன்றை தொடுக்கப்பட்டுள்ளது இதேபோல் இந்த இழிவுபடுத்தும் காட்சியை நீக்காத அமைப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in