ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன், என்ன படம்னு தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹாலிவுட் படத்தில் நடிகர் நெப்போலியன், என்ன படம்னு தெரியுமா?

Published

on

சீவலப்பேரி பாண்டி எனும் படத்தின் மூலம் மக்களின் மனதை ஆண்டவர் நெப்போலியன். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அரசியல்வாதி மற்றும் தொழில்முனைவோர் ஆவார். தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் மாவீரன் நெப்போலியனுக்கு ஒரு தனி இடம் உண்டு. நீண்ட காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கிவர் சமீபகாலமாக மீண்டும் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டு நடித்து வருகிறார். முத்துராமலிங்கம், சீமராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிப்பு மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டார் நெப்போலியன். ஆனால் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமீபத்தில் நெப்போலியன் தளபதி விஜய் தன்னை அசிங்கப்படுத்திய கூறி மிகவும் வருத்தப்பட்டார். அதுமட்டுமில்லாமல் நெப்போலியன் தற்போது ஹாலிவுட்டில் ஒரு படம் நடித்து மிரட்டியுள்ளார்.

Advertisement

டெவில்ஸ் நைட்(devil’s night ) எனும் பெயரில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அமெரிக்க ஹீரோயின் ஒருவரிடம் இவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படம் விரைவில் OTT ரிலீசாக வெளிவரும் எனவும் தெரிகிறது. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in