400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி..! இரவு எவ்ளோ நேரம் இருக்கப்போகுது தெரியுமா..? - cinefeeds
Connect with us

Uncategorized

400 ஆண்டுகளுக்கு பின்னர் வியாழன், சனி ஆகிய இரண்டு கோள்களும் நெருங்கி இணையும் அரிய காட்சி..! இரவு எவ்ளோ நேரம் இருக்கப்போகுது தெரியுமா..?

Published

on

2020ஆம் ஆண்டின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப்போகிறது. நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும் சனியும் டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன.

ஜோதிடப்படி இப்போது சனியும் குருவும் மகர ராசியில் இணைந்திருக்கிறது. வான் மண்டலத்தில் நிகழும் அரிய நிகழ்வானது 800 ஆண்டுகளுக்கு பிறகு நிகழப்போவதால் வானியல் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வைக் காண ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.

Advertisement

டிசம்பர் 21ஆம் தேதி வியாழனும் சனியும் இணையும் அந்த நாளில் வானில் அதிசய நட்சத்திரம் தோன்றும் என்றும் இதனை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர்.

அன்றைய தினம் நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Advertisement

21ஆம் தேதியன்று தெளிவான வானிலை இருந்தால் இந்த கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை உலகில் எந்த பகுதியில் இருந்தும் காணலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

800 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழப்போகும் அதிசயத்தைக் காண வானியல் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். 21ஆம் தேதி இரவே தெளிவாக கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் காணமுடியும். அதுவும் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் டெலஸ்கோப், பைனாக்குலர் மூலம் அதிசய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதேவேளை, அன்றைய தினம் நீண்ட இரவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in