LATEST NEWS
மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகாபலிபுரம் ரெசார்ட் சென்ற நடிகர் கலையரசன்.. வெளியான புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கலையரசன்.
இவர் முதன்முதலில் பா ரஞ்சித் இயக்கிய கார்த்திக் நடிப்பில் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதலில் வெப் சீரிஸ் களில் அடித்து வந்த நிலையில் அதன் பிறகு தான் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கினார்.
2012 ஆம் ஆண்டு அட்டகத்தி மற்றும் 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் ஆகிய திரைப்படங்களில் இவர் கேமியோ ரோலில் நடித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பேட்ட திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த சிங்கார் சிங் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர்.
பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்திலும் தீபன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து சர்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வெற்றி செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
சமீபத்தில் அரசியல் திரில்லர் தொலைக்காட்சி தொடரான செங்கலம் என்ற திரைப்படத்தில் இவர் ராயர் என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கலையரசன் தனது குடும்பத்துடன் சென்னை மகாபலிபுரம் ரிசார்ட் சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகிய வருகிறது.
