LATEST NEWS
இரண்டே படத்துல ஹீரோயினியா நடிச்சு… மொத்த ரசிகர்களையும் கட்டி போட்ட அதிதி சங்கர்.. லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இளைய மகளான அதிதி சங்கர் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.
டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சினிமாவில் நுழைந்தார்.
அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அதிதி சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து இவர் தற்போது அதிக அளவு விளம்பர படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார்.
விருமன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாகமாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த அதிதி சங்கர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் பத்திரிக்கையில் வேலை செய்யும் நகரத்து பெண்ணாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி சங்கர் தற்போது க்யூட்டான உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
