LATEST NEWS
தாமிரபரணி பட நடிகை பானுக்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!
தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தாமிரபரணி. இந்த திரைப்படத்தில் விஷால், பானு, பிரபு மற்றும் நதியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நடிகை பானு மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அங்கு முக்தா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் தமிழில் பானு என அழைக்கப்படுகின்றார். அடுத்தடுத்து தமிழில் நிறைய திரைப்படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சரியான படங்கள் எதுவும் அவருக்கு அமையவில்லை. இறுதியாக இவர் ஆர்யா நடிப்பில் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் தொழிலதிபர் ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு கிளாரா என்ற ஒரு மகள் உள்ளார். தற்போது அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வர அதில் அவரின் மகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என கூறி வருகிறார்கள்.
