சமந்தா முன்னாள் கணவருக்கு திருமணமா?.. இந்த பிரபல நடிகை தான் காதலிக்கிறாரா?.. என்னப்பா சொல்றீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சமந்தா முன்னாள் கணவருக்கு திருமணமா?.. இந்த பிரபல நடிகை தான் காதலிக்கிறாரா?.. என்னப்பா சொல்றீங்க..!!

Published

on

தெலுங்கு திரை உலகில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் நாக சைதன்யா. தமிழில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நாகசெய்தன்யாவின் ஜோடியாக நடித்த திரை உலகில் களம் இறங்கியவர் தான் பிரபல நடிகையான சமந்தா.

அந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் சுமார் 5 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த சமந்தா மற்றும் நாகச் சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த நிலையில் சமந்தா சினிமாவில் பிஸியாக நடித்து வர மறுபக்கம் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாவுடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய புது வீட்டிற்கு அவரை அழைத்து தனது பெற்றோரிடம் அவரை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

ஆனால் இந்த தகவலுக்கு நாக சைதன்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த செய்தி தற்போது தீயாய் பரவி வருகிறது. அதே சமயம் இதனை அறிந்த சமந்தா அவரைப் பிரிந்து விட்டதால் அதனை பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in