LATEST NEWS
நானும் ரீமாவும் பெட்ஷீட்குள்ள.. கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு.. நடிகர் விஷால் ஓபன் டாக்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த விஷால் முதல் படமே வெற்றி கொடுத்ததால் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர் இடத்தை பிடித்தார். தற்போது இவர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நிலையில் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு ரேட்டிங் போட்டுள்ளார்.
அதாவது நடிகை லட்சுமிமேனன் ஸ்டிரைக் ரேட் வேற என்று ஐந்துக்கு ஐந்து மார்க் முதல்முறையாக அவர் புகைப்படம் வந்த போது கொடுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகைகள் திரிஷா, சமந்தா மற்றும் நயன்தாரா என தன்னுடன் இணைந்து நடித்த அனைத்து நடிகைகள் குறித்தும் நல்ல விஷயங்களை விஷால் பகிர்ந்து கொண்டார். மேலும் செல்லமே திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரீமாசென் நடித்திருந்த நிலையில் டைரக்டர் நான் தான் படத்தின் ஹீரோ என ரேமாவிடம் அறிமுகப்படுத்தினார்.
ஜஸ்ட் ஹாய் என்று சொல்லிவிட்டு அப்படியே போயிட்டாங்க. இரண்டாவது நாளில் இயக்குனர் காந்தி கிருஷ்ணா எனக்கும் ரீமாவுக்கும் ஃபர்ஸ்ட் நைட் சீன் வச்சாரு. இப்பதான் நடிக்க ஆரம்பிச்சிருக்கேன் கொஞ்ச நாள் கழிச்சு இந்த சீன் எடுக்கலாம் என்று கேட்டேன். அப்போ நீ நினைக்கிற மாதிரி இது மோசமான சீன் இல்ல நல்லா இருக்கும் வந்து நடிகைன்னு கூலா சொல்லிட்டு போயிட்டாரு. ஒரு பெட்ல பெட்ஷீட் குள்ள ரீமாவுடன் படுத்து நடிக்கணும். அப்போ எனக்கு கை கால் எல்லாம் நடுங்கிடுச்சு.
அதன் பிறகு ஒரு நாள் நானும் ரீமாவும் பேசிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாவுல நீங்க ஒரு பெரிய நடிகராக வருவீங்க என்று அவர் என்னிடம் கூறினார். ஏங்க நடிக்க வந்து நாலு நாள் தான் ஆகுது இப்படி சொல்றீங்களே என்று கேட்டேன். அதற்கு எனக்குத் தோணுது மார்க் மை வேர்ஸ்ட் சொன்னாரு என தன்னுடைய முதல் படமான செல்லமே திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஷால் பகிர்ந்து கொண்டார்.