“யாரும் இல்லா வீட்டுக்கு வா”.. கையில் அதைக் கொடுத்து படுக்கைக்கு அழைத்த முன்னணி இயக்குனர்.. நடிகை ஷாலு ஷம்மு பகீர்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

“யாரும் இல்லா வீட்டுக்கு வா”.. கையில் அதைக் கொடுத்து படுக்கைக்கு அழைத்த முன்னணி இயக்குனர்.. நடிகை ஷாலு ஷம்மு பகீர்..!!

Published

on

தமிழ் சினிமாவில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படம் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷாலு சம்மு. தனது முதல் திரைப்படத்திலேயே நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சகலகலா வல்லவன்,மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டாம் கூத்து திரைப்படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்து அசத்தினார்.

இந்த நிலையில் நடிகை ஷாலு ஷம்மு ஒரு பேட்டியில் உண்மை ஒன்றை கூறியுள்ளார். அதாவது படம் ஒன்றில் நடிப்பதற்காக என்னை ஒரு இயக்குனர் அணுகினார். உங்களிடம் கதாபாத்திரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறி ஒரு முகவரியை கொடுத்து விட்டார். அந்த முகவரிக்கு நானும் நம்பி சென்ற நிலையில் அந்த வீட்டில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் இருந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நாம் வந்திருப்பது அவருடைய சொந்த வீடு என்று.

அப்போது எனக்கு ஜூஸ் கொடுத்து பேச்சை ஆரம்பிக்க தொடங்கிய போது படத்தைப் பற்றியோ இல்லை என்னுடைய கதாபாத்திரம் பற்றியோ பேசாமல் வேறு விஷயங்களை அதிகம் பேசினார். சிறிது நேரம் கழித்து என்னை அப்படியே படுக்கைக்கு அழைத்தார். உடனே அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து உடனடியாக கிளம்பி விட்டேன் என்று தனக்கு நடந்த மோசமான சம்பவம் பற்றி ஷாலு சம்மு பகிர்ந்துள்ளார்.