CRIME
நாடே அதிர்ச்சி..! 8 மாத சிசுவின் கருவை கவ்விச் சென்ற நாய்… மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியத்தால் நேர்ந்த கொடூர அவலம்..!!
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள மெடினிராய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நாய் ஒன்று 8 மாத சிசுவின் கருவை கவ்விச் சென்ற கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த இந்த அவலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அரசு மருத்துவமனைக்கு அருகில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. கருக்கலைப்பு செய்யப்பட்ட பின்னர், அந்த 8 மாத சிசுவின் உடலை மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக வெளியில் வீசியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே, அங்கு சுற்றித் திரிந்த நாய் ஒன்று அந்த சிசுவின் உடலைக் கவ்விச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சி மரணத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ‘உத்தம் மருத்துவமனை’ மற்றும் ‘நிபுன் அல்ட்ராசவுண்ட் மையம்’ ஆகியவற்றுக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்து மூடினர். மேலும், இந்த சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் சிறுமி மீதான வன்கொடுமை தொடர்பாக, 11 பேர் மீது போக்சோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
