CRIME
அடக்கொடுமைய… தசரா லீவு முடிந்து ஹாஸ்டல் திரும்பிய 10- ஆம் வகுப்பு மாணவி.. நள்ளிரவில் நேர்ந்த விபரீதம்… கதறி துடிக்கும் பெற்றோர்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டம் ராகவாபூரில் உள்ள கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா விடுதியில் தங்கிப் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி லாஸ்யா, பாம்பு கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிகண்டுலா கிராமத்தைச் சேர்ந்த லாஸ்யா, தசரா விடுமுறை முடிந்து சமீபத்தில்தான் விடுதிக்குத் திரும்பியுள்ளார். புதன்கிழமை இரவு மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, பள்ளி ஊழியர்கள் அவரது பெற்றோருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த பெற்றோர் வியாழக்கிழமை அதிகாலை விடுதிக்கு விரைந்தபோது, லாஸ்யா ஏற்கனவே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்றடைந்த போது, லாஸ்யா ஏற்கனவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நிலைகுலைந்து போன குடும்பத்தினரின் அழுகுரல் பார்ப்போரை நெகிழச் செய்துள்ளது. மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் என அவரது உறவினர்களும் கிராம மக்களும் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் போராடி வருகின்றனர். லாஸ்யாவின் உடல் தற்போது சித்திபெட் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
