LATEST NEWS
சூப்பர் ஸ்டாருக்கே கிடைக்கல, தளபதிக்கு மட்டும் கிடைச்சிருமா?.. விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கும் நிலையில் லலித் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் மாபெரும் எதிர்பார்ப்பின் காரணமாக பிசினஸ் மட்டுமே 434 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இருக்கும் நிலையில் விஜயின் லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி கிடைக்கும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் பேசி உள்ளார்.
அதாவது லியோ பணத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி இல்லை எனவும் ரஜினியின் செயலர் படத்திற்கு கிடைக்கவில்லை, அதுவும் சன் பிக்சர்ஸ் அரசுக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்த படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி கிடைக்காத போதை லியோ படத்திற்கு நான்கு மணி காட்சி கிடைக்காது. காலை 11.30 மணி காட்சி தான் லியோ படத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.