CINEMA
“விஜய்யை நேரில் சந்தித்த ‘முதல்வன்’ அர்ஜுன்…!”ஆட்சியைப் பிடித்த ஜோசப் விஜய்…! டாஸ்மாக் கடைகளுக்கு போட்ட அதிரடி பூட்டு…! இன்ஸ்டாகிராமில் உருகி உருகி எழுதிய அந்த ரகசிய வார்த்தை…!”
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அசாத்தியமான வெற்றியைப் பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். தேர்தல் முடிவுகள் வெளியான போது, தவெக பத்து தொகுதிகளைக் கூடத் தாண்டாது என்று கணித்த அரசியல் விமர்சகர்களின் கணிப்புகளைத் தவிடுபொடியாக்கி, மொத்தம் 108 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது அக்கட்சி. பெரும்பான்மைக்குத் தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் வழங்கியதோடு, அதிமுகவிலிருந்து 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் ஆதரவு அளித்தனர். இதனால், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசு தப்பித்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே ஜோசப் விஜய் தனது பணிகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கியுள்ளார். கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்துவது, டாஸ்மாக் விவகாரங்களில் காட்டும் கண்டிப்பு என அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தற்போது பேசுபொருளாகி வருகிறது. இவையனைத்தும் வெறும் விளம்பர யுத்திதான் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தாலும், களத்தில் அவரது செயல்பாடுகள் தீவிரமாகவே இருக்கின்றன. குறிப்பாக, நடிகர் முத்துக்காளை தனது மனைவியைக் காப்பாற்றக் கோரிய மனுவை ஏற்று, உடனடியாக அமைச்சர் ராஜ்மோகனை அனுப்பி வைத்த முதலமைச்சரின் வேகம் பலரையும் நெகிழ வைத்தது; இருப்பினும் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளுக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்துத் திரைத்துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்றிருப்பது ஒட்டுமொத்த சினிமா உலகினரையும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில், விஜய்யின் இந்த அரசியல் வளர்ச்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பவில்லை என்ற வதந்திகள் பரவிய போதிலும், “அவர் வெற்றி பெற்றவுடனேயே நான் வாழ்த்து தெரிவித்துவிட்டேன், அவர் மீது எனக்கு எந்தப் பொறாமையும் இல்லை” என்று ரஜினியே நேரடியாகக் கூறி அந்தச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது உலகநாயகன் கமல்ஹாசன், நாசர், கார்த்தி, கருணாஸ், இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ‘முதலவன்’ பட புகழ் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எங்களுடைய அன்பிற்கினிய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு; அதிக பொறுப்புகளை அழகாகவும், அமைதியாகவும் தாங்கிச் செல்லும் இந்தப் புதிய பயணத்தில் அவருக்கு மனவலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் சரியான வழிகாட்டுதல் எப்போதும் கிடைக்க வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். விஜய்யைச் சந்தித்த திரைத்துறையினர் அனைவரும், “முதலமைச்சரான பிறகும் அவரிடம் எந்த ஒரு பந்தாவும் இல்லை, பல வருடங்களுக்கு முன்பு எப்படி கேஷுவலாகப் பேசினாரோ அதே எளிமையோடுதான் பழகுகிறார்” என அவரைப் பாராட்டி வருகின்றனர்.
