கடைசி 30 நிமிடம் மாரடைப்பே வந்துடும்…! ஜார்ஜ் குட்டி இஸ் பேக்…!ஜீத்து ஜோசப் காட்டிய மரண மாஸ் வித்தை…!ஜார்ஜ் குட்டி நகர்த்திய அதிரடி காய்கள்…!மோகன்லால் ரசிகர்களுக்கு செம பர்த்டே ட்ரீட்…! – cinefeeds
Connect with us

CINEMA

கடைசி 30 நிமிடம் மாரடைப்பே வந்துடும்…! ஜார்ஜ் குட்டி இஸ் பேக்…!ஜீத்து ஜோசப் காட்டிய மரண மாஸ் வித்தை…!ஜார்ஜ் குட்டி நகர்த்திய அதிரடி காய்கள்…!மோகன்லால் ரசிகர்களுக்கு செம பர்த்டே ட்ரீட்…!

Published

on

மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடித்துப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திரிஷ்யம் 3’. ஏற்கனவே வெளியான இதன் இரண்டு பாகங்களும் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த மெகா ஹிட் படங்கள் என்பதால், இந்த மூன்றாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு வானளவிற்கு இருந்தது. ரசிகர்களின் அந்தப் பெருத்த எதிர்பார்ப்பை ஈடுகட்டும் வகையில், மோகன்லாலின் 66-வது பிறந்தநாளான மே 21 ஆம் தேதியான இன்று இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்குப் பிறந்தநாள் விருந்தாக அமைந்துள்ளது.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில், முந்தைய பாகங்களில் தன் மகன் கொல்லப்பட்டிருந்தாலும் ‘மன்னிப்போம் மறப்போம்’ என்ற சுபாவத்தில் இருந்த சித்திக்கின் கதாபாத்திரம், இதில் முற்றிலும் நேர் எதிராக, பழிவாங்கும் வெறியோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் காவல்துறையும் நீதிமன்றமும் வருண் கொலை வழக்கை முற்றிலுமாகக் கைவிட்ட நிலையில், ஜார்ஜ் குட்டி சினிமா மீதுள்ள தனது தீராத ஆசையால் ஒரு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் உருவெடுக்கிறார். தன் மூத்த மகள் அஞ்சுவுக்குத் திருமணம் செய்து வைக்க அவர் முயலும்போது, வரும் வரன்கள் அனைத்தும் தட்டிப் போகின்றன. இதன் பின்னணியைத் தேடிப் போகும் ஜார்ஜ் குட்டி, தன்னைச் சுற்றி இன்னும் சதி வலைகள் பின்னப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டறிந்து, அதற்கு எதிராகத் தனது புத்திசாலித்தனமான காய்களை எப்படி நகர்த்துகிறார் என்பதே மீதிக்கதை.

Advertisement

திரைக்கதையைப் பொறுத்தவரையில், சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிவிட்டாலும், குற்றம் புரிந்த ஒரு சாமானியனின் உள்ளுணர்வு ஜார்ஜ் குட்டியைத் தூங்க விடாமல் விழிப்புடன் இருக்கச் செய்கிறது. படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியின் பெரும்பகுதியும் கதையை நோக்கி மிகவும் நிதானமாகவே நகர்கின்றன. ஆனால், சரியாகக் கிளைமாக்ஸுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகத் திரைக்கதை அசுர வேகம் எடுத்து விறுவிறுப்பாக மாறுகிறது. தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் குட்டி எந்த எல்லைக்கும் செல்வார் என்பது திரிஷ்யம் ரசிகர்களுக்குத் தெரிந்த ஒன்றுதான் என்றாலும், அதை முந்தைய இரண்டு பாகங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுத்திக் காட்டி, இயக்குநர் ஜீத்து ஜோசப் மீண்டும் ஒரு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.

ஜார்ஜ் குட்டி தயாரிக்கும் சினிமாவிற்கும், நிஜ வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் கிளைமாக்ஸுக்கும் இடையே இயக்குநர் வைத்துள்ள பிணைப்பு ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுகிறது. சதீஷ் குரூப்பின் நேர்த்தியான ஒளிப்பதிவும், அனில் ஜான்சனின் விறுவிறுப்பான பின்னணி இசையும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு காட்சிக்கும், வசனத்திற்கும் திரைக்கதையில் படக்குழுவினர் பார்த்துப் பார்த்து மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. நிதானமான கதைக்களம், திருப்திகரமான கிளைமாக்ஸ் மற்றும் அடுத்த நான்காவது பாகத்திற்கான அழுத்தமான லீட் (Lead) ஆகியவற்றுடன், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் தனது மூன்றாவது இன்னிங்ஸிலும் பாக்ஸ் ஆபீஸில் செஞ்சுரி அடித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in