CINEMA
“லைகர்ல அழத் தெரியல…! இப்போ ஆடவும் தெரியல…!”பரதநாட்டியமா? இல்ல ரோபோ டான்ஸா…! அனன்யா பாண்டேவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்…!அனன்யா மட்டுமே காரணமல்ல…!ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மிகப்பெரிய அலட்சியம்…!
ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் ‘சித்ரா தேவி பிரியா’ என்ற கதாபாத்திரத்தில் ஆடுவதும் பாடுவதுமாக அலப்பறையைக் கிளப்பியிருப்பார். அதே பாணியில் தற்போது பாலிவுட் இளம் நடிகை அனன்யா பாண்டே, தான் நடித்துள்ள புதிய இந்தித் திரைப்படம் ஒன்றில் மேடையில் பரதநாட்டியம் ஆடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ‘வாரிசு அரசியல்’ (Nepotism) காரணமாக எளிதாக சினிமாவுக்குள் நுழைந்துவிட்டால் திறமை இல்லாவிட்டாலும் இப்படித்தான் இருக்கும் என நெட்டிசன்கள் அவரைச் சாடி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே நடித்த ‘லைகர்’ திரைப்படம் படுதோல்வி அடைந்தபோது, அதில் அவருக்கு ஒழுங்காக அழக்கூடத் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் ரோஸ்ட் செய்தனர். தற்போது அவருக்கு ஆடவும் தெரியவில்லை என நெட்டிசன்கள் பங்கமாக வதறி எடுத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பிகினி உடைகளிலும், கவர்ச்சியான உடைகளிலும் போஸ் கொடுத்து ஏகப்பட்ட ஃபாலோயர்களை ஈர்த்து வரும் அனன்யாவுக்கு, அவர் நடிக்கும் படங்கள் மூலமாகவே தொடர்ந்து சோதனைகள் குவிந்து வருகின்றன. ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவி ஆடிய நடனத்தைப் பார்த்தோ அல்லது ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்த் ஆடிய பாரம்பரிய நடனத்தைப் பார்த்தோ அனன்யா பாண்டே நடனம் கற்க வேண்டும் என்றும், அவர் ஆடுவது பரதநாட்டியம் போல இல்லாமல் ரோபோ ஆடுவது போல இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்தத் தவறுக்கு அனன்யா பாண்டே மட்டுமே முழு காரணம் கிடையாது என்று அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்து வாதாடி வருகின்றனர். நடன இயக்குநர் மற்றும் படத்தின் இயக்குநர் ஆகிய இருவருமே படப்பிடிப்பு தளத்திலும், எடிட்டிங் டேபிளிலும் இந்த நடனக் காட்சியைக் கவனித்துச் சரி செய்யாமல் அப்படியே படத்தில் வைத்ததுதான் இந்த மோசமான விமர்சனங்களுக்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இயக்குநரின் அலட்சியத்தால் அனன்யா பாண்டே தேவையின்றி இணையவாசிகளின் ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளார் என்ற விவாதமும் தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
