“அமைச்சர்கள் எல்லாம் ஜோக்கர்கள்…! குறை பிரசவத்தில் வெற்றி…! நிழல் முதலமைச்சர் அவர் தானா…? தவெக அரசை வறுத்தெடுத்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்….!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அமைச்சர்கள் எல்லாம் ஜோக்கர்கள்…! குறை பிரசவத்தில் வெற்றி…! நிழல் முதலமைச்சர் அவர் தானா…? தவெக அரசை வறுத்தெடுத்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர்….!!

Published

on

அரியலூரில் நடைபெற்ற திமுக கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்மைய சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் கொளத்தூர் தொகுதி இழப்பு ஆகியவை தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்பொழுது குறுக்கு வழியில் குறுங்காலப் பிரசவமாக அமைந்துவிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றும், இது வெறும் நீர்க்குமிழி போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.

சமூக ஊடகங்கள் மற்றும் குழந்தைகளைத் திசை திருப்பி வெறும் 35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தவெக தற்காலிகமாக வென்றுள்ளதாகவும், தங்களுக்குப் பலமான அரசியல் கட்டமைப்பு இல்லாததால் தான் தற்போது அதிமுகவின் முன்னாள், இந்நாள் மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் வலைவீசிப் பிடித்து வருகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியில் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் அனைவரும் எவ்வித அனுபவமும் இல்லாத ஜோக்கர்களைப் போலச் செயல்படுவதாகவும், அவர்களுக்கு முதலில் பேசுவதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் சாடினார். தவெக-வில் விஜய் உண்மையான முதலமைச்சராகச் செயல்படவில்லை என்றும், பின்னணியில் இருந்து கொண்டு ஆதவ் அர்ஜுனா தான் நிழல் முதலமைச்சராக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் இயக்கி வருகிறார் என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், திமுக பார்க்காத தோல்விகளே இல்லை என்று குறிப்பிட்ட அவர், தவெக அரசு விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளதை எடுத்துரைத்து, தவெக-வின் நிர்வாகத் தவறுகளைத் தொண்டர்கள் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in