CINEMA
“இரண்டு கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யப்போகும் ஆர்யா…ஆக்ஷன் படங்களுக்கு குட்-பை சொன்ன ஆர்யா…”சார்பட்டா பரம்பரை டூ ரொமான்டிக் காமெடி…ஆர்யாவின் செம மாஸ் கம்பேக்; ரசிகர்கள் கொண்டாட்டம்…!”
நடிகர் ஆர்யாவின் திரைப்பயணத்தில் 40-ஆவது திரைப்படமாக உருவாகி வரும் ‘ஆர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் இணைந்து மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்ட கலகலப்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மலையாளத்தில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்ற ‘ப்ரணயவிலாசம்’ திரைப்படத்தின் இயக்குநர் நிகில் முரளி இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
நவீன கால இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம், ஆர்யாவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த ‘ராஜா ராணி’ திரைப்படத்தை நினைவூட்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை ஆர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் தயாரிக்கிறது; இதில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷாவும் தயாரிப்புப் பணிகளில் இணைந்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா என இரு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளதால், இவர்களுக்கிடையேயான காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இத்திரைப்படத்திற்கு ஸ்டார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘ராஜா ராணி’ படத்தின் பிரம்மாண்ட இசை வெற்றிக்குக் பிறகு ஆர்யா – ஜி.வி. பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் சார்பட்டா பரம்பரை, கேப்டன், மிஸ்டர் எக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் ஆக்ஷன் மற்றும் தீவிரமான கதாபாத்திரங்களில் மிரட்டியிருந்த ஆர்யா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது வழக்கமான கலகலப்பான முழு நீளக் காதல் கதைக்குத் திரும்பியுள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு வெளியான இவர்களின் பிரத்யேகப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றன.
