CINEMA
த்ரிஷாவின் அம்மாவை புறக்கணித்தாரா சங்கீதா?…ஜூன் 15-ல் நீதிமன்றத்தில் ஆஜராகிறாரா முதல்வர் விஜய்?…”விவாகரத்து வழக்கில் பரப்பரப்பான அடுத்த கட்டம்…!
தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு விவகாரம், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததற்கு நடிகை த்ரிஷா தான் காரணம் எனப் பரவலாகப் பேசப்பட்ட சூழலில், விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் சில முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கலந்துகொண்டது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியது. குறிப்பாக, தேர்தல் வெற்றி உறுதியானவுடன் த்ரிஷா முதல் ஆளாக விஜய் வீட்டிற்குச் சென்றது, பதவியேற்பு விழாவில் அவருக்கு முதல் இருக்கை ஒதுக்கப்பட்டது மற்றும் அஜித்தின் தாயார் மறைவிற்கு இருவரும் ஒன்றாகச் சென்றது போன்ற சம்பவங்கள் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பூர்வமாக ஒரு முடிவை எடுக்காமல் விஜய் இப்படிச் செய்வது தங்களுக்குச் சோகத்தை அளிப்பதாக அவரது ரசிகர்கள் ஓபனாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவிற்குச் சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கின் விசாரணை நடந்தபோது இரு தரப்பும் ஆஜராகவில்லை எனக் கூறப்படும் நிலையில், வரும் ஜூன் 15-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதால், பல்வேறு அரசுப் பணிகளுக்கு இடையே அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா அல்லது ஆன்லைன் மூலமாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சரின் அரசியல் இமேஜைப் பெண்கள் மத்தியில் பாதிக்கக்கூடிய உணர்ச்சிகரமான விஷயம் என்பதால், இந்த ஜூன் 15 விசாரணை ஒட்டுமொத்த தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழலுக்கு நடுவே, சங்கீதா கலந்துகொண்ட பழைய நிகழ்ச்சி ஒன்றின் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணனும் கலந்துகொண்டுள்ளார்; ஆனால் சங்கீதா அவரைத் தாண்டிச் சென்று நடிகை குஷ்புவிடம் பேசுவதும், உமாவைத் தவிர்ப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், சங்கீதா வேண்டுமென்றே த்ரிஷாவின் தாயாரைத் தவிர்த்தாரா அல்லது எடிட் செய்யப்பட்ட வீடியோவா என விவாதித்து வருகின்றனர். அதேநேரம், தற்போதைய அரசியல் சூழலில் தேவையின்றி இந்த பழைய வீடியோவை சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகவும் விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
