CINEMA
இணை தயாரிப்பாளராக மாறும் அஜித்குமார்…வெளிநாட்டில் கார் ரேஸ்… அஜித் கேட்ட பிரம்மாண்ட தொகை…துபாய் வங்கி கணக்குக்கு மாறும் கோடிகள்? அஜித் விதித்த கறாரான நிபந்தனையால் தயாரிப்பாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் குறித்து, இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமார் தற்போது கார் ரேஸில் தீவிர கவனம் செலுத்தி வருவதால், கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்தாலும் வசூலில் 100 கோடி ரூபாயைக் கடந்தது. இருப்பினும், அவரது மார்க்கெட் மதிப்பிற்கு இந்த வசூல் குறைவுதான் என்ற பேச்சு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ள நிலையில், அவரது அடுத்த படத்தின் தாமதத்திற்குப் பின்னணியில் சம்பள விவகாரமே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அஜித் கேட்கும் பிரம்மாண்ட தொகையைத் தர தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததே இந்த இழுபறிக்குக் காரணம் எனத் திரைத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் தனது சம்பளமாக ₹187 கோடி கேட்ட அஜித், பின்னர் ₹165 கோடியாகக் குறைத்து, இறுதியாக ₹150 கோடிக்கு உடன்படச் சம்மதித்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, இந்த சம்பளப் பணத்தைத் துபாய் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் தான், இப்படத்தை தயாரிக்கப் புகழ்பெற்ற ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அஜித்துடன் இணைந்து படம் பண்ண அவர்கள் விரும்பினாலும், அவரது தற்போதைய மார்க்கெட் நிலவரத்தைக் கணக்கிட்டு ₹90 கோடிக்கு மேல் ஒரு ரூபாய் கூட தர முடியாது என கறாராகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
ஹோம்பாலே நிறுவனம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, மற்றொரு பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் அஜித்திற்கு ₹110 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், புதிய படத்தில் அஜித் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்ற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஒருபுறம் சம்பளப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையில் நிற்க, மறுபுறம் அஜித்தோ வெளிநாட்டில் கார் ரேஸில் பிஸியாக இருப்பதோடு, தன்னால் இயன்றவரை ரேஸ் செய்வதில் தான் கவனம் செலுத்தப் போவதாகவும் சமீபத்திய பேட்டியில் உறுதிபடக் கூறியுள்ளார். தயாரிப்பு நிறுவனங்களின் நிபந்தனைகளும், அஜித்தின் சம்பளப் பிடிவாதமும் எப்போது ஒரு புள்ளியில் இணையும், எப்போது ஏகே ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் விடை கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
