CINEMA
தெறிக்க விடலாமா…? நடிகர் அஜித்தின் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு….!!!

நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோவானது வெளியாகி உள்ளது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிச்செலின் துபாய் 24H 2025, ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப், போர்ஸ் 992 GT3 கோப்பை பிரிவுகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியில் பங்கேற்க உள்ளது.