CINEMA
500 கோடி சொத்து யாருக்கு…இறுதிச்சடங்கில் மருமகளை துரத்திய ஜனனி…: மலேசியாவில் நடந்த ‘அந்த’ விஷயம்.. பாரதிராஜா மகளின் மீது தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அதிர்ச்சி குற்றச்சாட்டு….!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள சொத்து தகராறு மற்றும் மோதல்கள் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மகன் மனோஜின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா, அண்மையில் தனது 84-வது வயதில் காலமானார். அவரது ஆசைப்படியே வத்தலகுண்டு பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்யப்பட்டு, திரைத்துறையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆனால், அவரது சென்னை நீலாங்கரை இல்லத்தில் இறுதிச்சடங்கு நடந்தபோதே, இயக்குநர் கங்கை அமரன் பாரதிராஜாவின் மனைவியிடம் ‘அவரை அனாதையாக விட்டுவிட்டீர்கள்’ என ஆவேசமாகக் கத்தியது குடும்பப் பின்னணியில் இருக்கும் விரிசல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
இந்தச் சூழலில், பாரதிராஜாவின் இறுதிச் சடங்கின்போது அவரது மகள் ஜனனிக்கும், மறைந்த மனோஜின் மனைவி நந்தனாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நந்தனாவை இறுதிச்சடங்கு நிகழ்விலிருந்து ஜனனி வெளியேறச் சொன்னதாகவும், மனோஜின் மகள்களைக் கூட அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னரே நடிகை ராதிகா தலையிட்டு நிலைமையைச் சுமுகமாக்கியதாகத் தெரிகிறது. ஏற்கனவே நந்தனாவை வீட்டை விட்டு காலி செய்யக் கோரி ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், பாரதிராஜாவின் மறைவுக்குப் பின் இந்த குடும்பப் பகை பொதுவெளியில் வெடித்துள்ளது.
இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பாரதிராஜாவுக்கு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அவர் மலேசியாவில் இருந்தபோது பல சொத்துக்களை ஜனனி தன் பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்டதாகக் கூறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரிசுகளுக்குச் சமமாகச் சொத்துக்களைப் பிரிக்க நினைத்த பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், “கேரளாவிலிருந்து வந்த நந்தனாவுக்கு ஏன் சொத்துக்கள் போக வேண்டும்” என்ற எண்ணத்தில் ஜனனி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார். சொத்துக்காகக் குடும்பமே நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
