CINEMA
“ரியல் ஹீரோ ஜோடி…ரகசிய திருமணத்திற்குப் பின் ராஷ்மிகா எடுத்த திடீர் முடிவு…இனி நான் ராஷ்மிகா மந்தனா இல்லை… மேடையில் மைக் பிடித்து ராஷ்மிகா சொன்ன ‘அந்த’ ரகசியம்…!
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்களது திருமணத்தை ரகசியமாக முடித்த கையோடு, தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் சென்சேஷனை ஏற்படுத்தியுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஊரான தெலங்கானாவில் உள்ள தும்மன்பேட்டை கிராமத்திற்கு இந்த புதுமணத் தம்பதி சென்றனர். ஊருக்கு வந்த மணமக்களை கிராம மக்கள் பூக்களைத் தூவி பிரம்மாண்டமாக வரவேற்றனர். அங்குள்ள தங்களது இல்லத்தில் நடைபெற்ற சத்யநாராயண சுவாமி விரத பூஜை மற்றும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ராஷ்மிகா – விஜய் ஜோடி, பெரியோர்களிடம் ஆசி பெற்றனர்.
இந்தச் சொந்த ஊர் பயணத்தில் வெறும் பூஜைகள் மட்டுமல்லாமல், ஒரு உன்னதமான சமூகப் பணியையும் இந்தத் தம்பதி இணைந்து செய்துள்ளனர். தும்மன்பேட்டை அரசுப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் திறமையான 180 கிராமப்புற மாணவர்களை நேரில் அழைத்து, அவர்களுக்குத் தேவையான கல்வி உதவிகளையும், சிறப்புப் பரிசுகளையும் விஜய் தேவரகொண்டா வழங்கினார். அப்போது பேசிய விஜய், “கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது; எனவே கிராமப்புற மாணவர்கள் தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு பெரிய கனவுகளைக் காண வேண்டும்” என்று ஊக்கமளித்தார். நடிகை ராஷ்மிகாவும் மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் எதிர்கால லட்சியங்கள் குறித்துப் பேசி வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்த நெகிழ்ச்சியான பாராட்டு விழாவின் முக்கிய ஹைலைட்டாக அமைந்தது ராஷ்மிகா மந்தனாவின் மேடைப் பேச்சுதான். மேடையில் மைக் பிடித்துப் பேசத் தொடங்கிய ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா, தன்னை “ராஷ்மிகா மந்தனா தேவரகொண்டா” என்று அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக அறிமுகப்படுத்திக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் குடும்பப் பெயரைத் தன்னோடு இணைத்துக் கொண்டதாக ராஷ்மிகா அறிவித்ததும், அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தினர். இதைக் கேட்டு மேடையில் இருந்த விஜய்யின் தாயார் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது இருவரும் தங்களது அடுத்தடுத்த பான்-இந்தியா படங்களில் பிஸியாக இருந்தாலும், இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
