அவர் அப்படியே கமல் ஹாசன் மாதிரி…மகன்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியும் பார்க்க முடியலையா…ஆஃப் ஸ்கிரீனில் ரவி மோகன் செய்த காரியத்தை உடைத்த டிக் டிக் டிக் நடிகர்… – cinefeeds
Connect with us

CINEMA

அவர் அப்படியே கமல் ஹாசன் மாதிரி…மகன்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டியும் பார்க்க முடியலையா…ஆஃப் ஸ்கிரீனில் ரவி மோகன் செய்த காரியத்தை உடைத்த டிக் டிக் டிக் நடிகர்…

Published

on

தமிழ் சினிமாவில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல், ‘ஜென்டில்மேன்’ என்ற பெயருடன் வலம் வந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக 2024-ஆம் ஆண்டு, “எதிர்கால நலன்களைக் கருதி ஆர்த்தியிடமிருந்து விலகுகிறேன்” என அவர் வெளியிட்ட விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சமாதான முயற்சியில் ஈடுபட்ட போதிலும், ரவி மோகன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இதற்கிடையே, பின்னணி பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனுக்கு ஏற்பட்ட பழக்கம் அடுத்தகட்ட சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

சமீபத்தில், “சென்னையை விட்டு வெளியேறுகிறேன், ரவிக்காக எவ்வளவோ போராடிவிட்டேன்” என்று கெனிஷா வீடியோ வெளியிட, அதற்குப் பதிலடியாக “தூங்கிக் கொண்டிருக்கும் தாய் சிங்கத்தைத் தட்டி எழுப்பாதீர்கள்” என ஆர்த்தியும் பதிவிட, இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமானது. இதனால் ஆத்திரமடைந்த ரவி மோகன், நீதிமன்ற உத்தரவையும் மீறி அவசரமாகச் செய்தியாளர்களைச் சந்தித்துக் கதறி அழுதார். தன் மகன்களின் பள்ளி கட்டணத்தைச் செலுத்தியும் அவர்களைப் பார்க்க அனுமதிப்பதில்லை என்றும், தனக்குச் சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்புக்கு எதிராக ஆர்த்தி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய, இறுதியாக ரவி மோகன் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Advertisement

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் ரவி மோகன் சிக்கியிருந்தாலும், அவர் விரைவில் இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இந்நிலையில், ரவி மோகனுடன் ‘டிக் டிக் டிக்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகர் அர்ஜுனன், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரவி மோகனின் மறுபக்கத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். “ரவி மோகன் ஆஃப் ஸ்கிரீனில் சக நடிகர்களுடன் மிக எளிமையாகப் பழகக்கூடியவர். தன்னுடன் நடிக்கும் சப்போர்ட் ஆக்டர்களை உடனே கம்ஃபோர்ட் ஜோனுக்குள் கொண்டு வந்துவிடுவார்; அந்த விஷயத்தில் அவர் உலகநாயகன் கமல் ஹாசன் போன்றவர். நான் அவரை முதன்முதலில் சந்தித்து ‘ஹலோ சார்’ என்று முறைப்படி பேசியபோது, ‘டேய் இப்படி பேசினா எப்படி என்கூட நடிப்ப.. வா டா பிரெண்ட்லியா இருப்போம்’ எனக் கூறி என்னையும், திலக் ரமேஷையும் அன்போடு அரவணைத்துக் கொண்டார்” என்று ரவி மோகனின் நட்பான குணத்தை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in