CINEMA
300 கோடி ‘அமரன்’ கொடுத்த தைரியம்…ரஜினி பட ஸ்லாட்டை எஸ்கே-வுக்கு கொடுத்த கமல்ஹாசன்…ராஜ்கமல் பிலிம்ஸ் எடுத்த அதிரடி முடிவு…சேயோன்’ படத்திற்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு…கொண்டாட்டத்தில் எஸ்கே ரசிகர்கள்…!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘தலைவர் 173’ திரைப்படம், தொடக்கம் முதலே பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’, கமலை வைத்து ‘அன்பே சிவம்’ எனப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த மூத்த இயக்குநர் சுந்தர்.சி தான் முதலில் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குநராக கமிட்டானார். கடந்த ஏப்ரல் மாதமே இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசல் புரசலான தகவல்களின்படி சிபி சக்கரவர்த்தியும் இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, சுந்தர்.சி விலகியபோது ரஜினி, கமலுடன் அவருக்குப் பிரச்னை என்று கிளம்பிய வதந்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்திருந்தார். வருங்காலத்தில் இணைந்து படம் பண்ணலாம் என்று கூறித்தான் அவர்கள் தன்னை அனுப்பி வைத்ததாக சுந்தர்.சி விளக்கமளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சிபி சக்கரவர்த்தியும் விலகியதாக ஓடும் தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்றாலும், திட்டமிட்டபடி படப்பிடிப்பு இன்னும் தொடங்காதது படக்குழுவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தலைவர் 173’ படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே இப்படம் 2027 பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தாமதங்களால் அந்தத் தேதியில் படம் வெளியாவது சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக, ராஜ்கமல் நிறுவனம் ‘தலைவர் 173’ படத்திற்காக ஒதுக்கப்பட்ட 2027 பொங்கல் ரிலீஸ் ஸ்லாட்டில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தாங்கள் தயாரித்து வரும் ‘சேயோன்’ திரைப்படத்தை வெளியிட அதிரடி முடிவெடுத்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் இத்திரைப்படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து மெகா சாதனை படைத்ததால், இந்த ‘சேயோன்’ திரைப்படமும் அதேபோல் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் எனத் திரையுலகினர் கணித்துள்ளனர்.
