LATEST NEWS
ஜெனீவா பேச்சுவார்த்தை ரத்து….! அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் வெடித்தது மோதல்…. உலக நாடுகள் அதிர்ச்சி…!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று தொடங்கவிருந்த அணுசக்தி குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நாடு தென் லெபனான் மீது தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தியதே இதற்குக் காரணமாகும். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையானது இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முதல் விதியை மீறும் செயல் எனக் குற்றம்சாட்டியுள்ள ஈரான், தங்களின் 60 நாள் பேச்சுவார்த்தை காலத்தை முழுமையாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துத் தனது குழுவின் பயணத்தையும் ரத்து செய்துள்ளது.
ஈரானின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தைக் கைவிட்டுள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜேடி வான்ஸ் ஆகியோர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன், உடனடியாகப் போரை நிறுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஒப்பந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை அமெரிக்கா உறுதி செய்யும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
