CINEMA
ஜனநாயகன் படத்தின் எடிட்டருக்கு தர்மன் படத்தில் திடீர் வாய்ப்பு, இடைக்கால தடை செய்யப்பட்ட அவர் ரஜினி படத்தில் பணி வாய்ப்பை பெற்றது எப்படி? வெளியானது உண்மை!
தமிழில் பல வெற்றிப் படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர் பிரதீப் ராகவ். இவர் நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்தில் எடிட்டராக பணி செய்தார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இணையத்தில் கசிந்தது. இதுகுறித்து பிரதீப் ராகவின் உதவியாளராக பணிசெய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த படத்தின் எடிட்டர் என்ற முறையில் பிரதீப் ராகவ்வும் இதற்கு பொறுப்பு என அவரை தென்னிந்திய சினிமா எடிட்டர்கள் சங்கத்தில் இருந்து தற்காலிக நீக்கம் செய்துவிட்டனர்.
இந்த நிலையில் பிரதீப் ராகவ், எடிட்டர்கள் சங்கத்தில் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்தார். பிரதீப் ராகவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பரிசீலனை செய்த சங்க நிர்வாகம், அவர் மீதான இடைநீக்க தடை நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கோபி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து பிரதீப் ராகவ், கமல்ஹாசன் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் படத்தொகுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
