LifeStyle
வீடுகளில் பூஜை செய்யும்போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள், எதிர்மறை ஆற்றல் வராமல் தடுக்க இந்த விஷயங்களில் கவனமா இருங்க!
வீட்டில் பூஜை செய்யும் போது எதிர்மறை ஆற்றலை தடுக்கவும் வழிபாட்டின் முழு பலன்களையும் அடையவும் சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஈர உடை அல்லது தூக்க கலக்கத்துடன் பூஜை செய்யக்கூடாது. சுவாமி வழிபாட்டை ஒரு வேலையாக கருதி அவசரமாக முடிக்க கூடாது. மன அமைதியுடன் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் பூஜைக்காக ஒதுக்கி மனதார சுவாமியை வழிபட வேண்டும். சாப்பிட்ட கையுடன் வாய் கொப்பளிக்காமல் மந்திரங்களை உச்சரிக்க கூடாது. பெண்கள் தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு பூஜை செய்யக்கூடாது.
பூஜை அறையில் வைக்க கூடாதவை – உடைந்த சிலைகள் உடைந்த விரிசல் விழுந்த அல்லது சேதமடைந்த சிலைகள் மற்றும் கிழிந்த சுவாமி படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது. பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக் கூடாது. உக்கிரமான கோபமான கடவுள் உருவங்களை உதாரணமாக நடராஜர் காலபைரவர் உக்கிர நரசிம்மர் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது வாஸ்து முறைப்படி தவிர்க்க வேண்டும். பூஜை அறையில் தோல் பொருட்கள் கத்திரிக்கோல் ஊசிகள் மற்றும் எந்த விதமான குப்பைகளையும் வைக்க கூடாது.
நிவேதனம் மற்றும் மலர்கள் – பழைய பூக்கள் முந்தைய நாள் பூஜிக்கப்பட்ட வாடிய மலர்கள் அல்லது நேற்று வாங்கிய பழங்களை இறைவனுக்கு படைக்கக்கூடாது. பூக்கள் பழங்கள் வெற்றிலை போன்றவற்றை நேரடியாக தரையில் வைக்கக்கூடாது. எப்போதும் தட்டு அல்லது இலைகளில் அவற்றை வைக்க வேண்டும். விநாயகர் மற்றும் பைரவருக்கு துளசி இலைகளை படைக்கக்கூடாது. அதேபோல் குளிப்பதற்கு முன்பு துளசி இலைகளை பறிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். இந்த விஷயங்களை கட்டாயம் வீட்டில் பூஜை செய்பவர்கள் கவனத்தில் கொண்டு தவிர்க்க வேண்டும்.
