“சோபா மாடல் ஆட்சியைத் துவைச்சு தொங்கவிட்ட உதயநிதி…” விவசாயிகளுக்கு துரோகம்… மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்… தஞ்சையில் அனல் பறந்த பேச்சு…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சோபா மாடல் ஆட்சியைத் துவைச்சு தொங்கவிட்ட உதயநிதி…” விவசாயிகளுக்கு துரோகம்… மின்வெட்டால் தவிக்கும் தமிழகம்… தஞ்சையில் அனல் பறந்த பேச்சு…!!

Published

on

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தவெக ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஐந்து ஏக்கர் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, தற்போது தவெக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் கடன் பெற்றிருந்தாலோ அல்லது அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலோ அவர்களுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என அரசு ஏமாற்றிவிட்டதாகச் சாடினார். மேலும், குறுவை சாகுபடிக்கு அஞ்சல் மற்றும் மேட்டூர் அணை நீர் திறப்பில் அரசு காட்டும் அலட்சியத்தால் டெல்டா விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

Advertisement

தற்போது தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவால் மாநிலமே ஒரு பெரும் பேரிடரில் சிக்கியுள்ளதாகவும், சட்டமன்றத்தின் கண்ணியத்தை ஆளுங்கட்சியினர் கெடுத்து வருவதாகவும் உதயநிதி விமர்சித்தார். தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரே மாதத்தில் உடைந்து நொறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் தங்களது உரிமைகளுக்காகக் கேள்வி எழுப்பினால் அவர்களை இந்த அரசு ஒடுக்குமுறை மூலம் கைது செய்வதாகக் கூறினார்.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் போன்ற முன்னோடித் திட்டங்களால் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களின் இதயங்களில் நிறைந்திருப்பதாகவும், ஆனால் தற்போதைய முதல்வர் விஜய் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூர் பக்கமே செல்லாமல் முடங்கியிருப்பதாகப் பொதுமக்கள் புலம்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in