“மக்களே பெரிய ஊழல்வாதிகள்” வாங்க வேண்டிய இடத்தில் பணத்தை வாங்கிட்டு… அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“மக்களே பெரிய ஊழல்வாதிகள்” வாங்க வேண்டிய இடத்தில் பணத்தை வாங்கிட்டு… அமைச்சர் விஜய் பாலாஜி சர்ச்சை பேச்சு..!!

Published

on

“மக்களே பெரிய ஊழல்வாதிகள்” என்று தவெக அமைச்சர் விஜய் பாலாஜி பேசியிருப்பது பெரும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் ஊழல் செய்துதான் நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் 2026 தேர்தலில் மக்கள் தான் மிகப்பெரிய ஊழல் செய்தனர் என்று அவர் ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் ஓப்பனாகப் பேசியுள்ளார். வாங்க வேண்டிய இடத்தில் பணத்தை வாங்கிக்கொண்டு, ஓட்டு குத்த வேண்டிய இடத்தில் மக்கள் சரியாகக் குத்தியதால் தான் தவெக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் அவர் அந்த மேடையில் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் விஜய் பாலாஜியின் இந்த அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் இருந்து பலத்த கைதட்டல் எழுந்துள்ளது. பொதுவாக அரசியல்வாதிகள் மக்களைப் பாராட்டிப் பேசும் நிலையில், வாக்களித்த மக்களையும், தேர்தல் முறையையும் விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ள அமைச்சரின் இந்த பேச்சு தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in