LATEST NEWS
“ஒட்டுமொத்த டெல்டாவே காலியாகும்” தவெக-வில் இணையும் முன் சி.விஜயபாஸ்கர் கொடுத்த ‘ஷாக்’ பேட்டி.. அதிர்ச்சியில் அதிமுக தலைமை..!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார். இந்த அரசியல் மாற்றத்திற்கு இடையே அவர் அளித்துள்ள புதிய பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது பேட்டியில், தற்போதைய அதிமுக தலைமை எடுத்துள்ள தவறான முடிவுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். தலைமையின் தவறான கொள்கை மற்றும் செயல்பாடுகளால்தான் மகாபலிபுரத்தில் கடல் போல மக்கள் கூட்டம் திரண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஒட்டுமொத்த டெல்டா பகுதியே முற்றிலும் காலியாகும் ஒரு மோசமான நிலைமை நிலவுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கட்சியின் தற்போதைய நிலை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள அவர், இந்த அதிரடி கருத்துக்கள் மூலம் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார். இவர் தவெக-வில் இணையவுள்ள சூழலில் தற்போதைய தலைமைக்கு எதிராக வைத்துள்ள இந்த விமர்சனம் தற்போதைய அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
