LATEST NEWS
புது தமிழ்நாடு மாடல் வாஷிங்க் மெஷின் “குட்கா கரைகளைக் கூட நீக்குமாமே”.. அது உண்மையா..? மறைமுகமாக தவெக அரசை கிழித்தெடுத்த கனிமொழி..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ள முடிவை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வடமாநிலங்களில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற ‘வாஷிங் மெஷின்’ அரசியல் தற்பொழுது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன் என்று சாடியுள்ளார். மேலும், இந்த புதிய தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கரைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே… அது உண்மையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது, தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை சட்டவிரோதமாக அனுமதிப்பதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ (CBI) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், அவர் புதிய கட்சியில் இணைவதை மறைமுகமாகக் குறிப்பிட்டு, குட்கா ஊழல் கறையைத் துடைக்கவே இந்த அரசியல் நகர்வு என கனிமொழி எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
