பி.எஃப் சந்தாதாரர்களுக்கு மெகா குட் நியூஸ்… 100% வரை பணம் எடுக்கலாம்.. புதிய விதிகள் அதிரடி அமல்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பி.எஃப் சந்தாதாரர்களுக்கு மெகா குட் நியூஸ்… 100% வரை பணம் எடுக்கலாம்.. புதிய விதிகள் அதிரடி அமல்..!!

Published

on

வருங்கால வைப்பு நிதி கணக்கில் இனி மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது முற்றிலும் விருப்பத் தேர்வாக மாற்றப்படும் புதிய நடைமுறையை மத்திய தொழிலாளர் அமைச்சகம் அமலுக்குக் கொண்டு வருகிறது. புதிய விதிகளின்படி, மாதம் ரூ.15,000 வரை உள்ள அடிப்படை ஊதிய வரம்பிற்கு 12 சதவீத பங்களிப்பு (அதாவது ஊழியர் மற்றும் நிறுவனம் தலா ரூ.1,800) மட்டுமே கட்டாயமாக்கப்படும். ஒருவரது அடிப்படைச் சம்பளம் ரூ.1 லட்சமாக இருந்தாலும் கூட, கட்டாய பி.எஃப் பிடித்தம் ரூ.1,800 ஆக மட்டுமே இருக்கும்; அதற்கு மேல் சேமிக்க விரும்புபவர்கள் தங்களின் விருப்ப அடிப்படையில் கூடுதல் தொகையைச் செலுத்திக் கொள்ளலாம்.

இதனுடன் பி.எஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுக்கும் விதிகளும் தாராளமயமாக்கப்பட்டு, சந்தாதாரர்கள் தங்களின் தகுதியான இருப்பிலிருந்து 100 சதவீதம் வரை முன்பணமாக எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் முன்பணம் எடுக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இதில் ஊழியர் மற்றும் நிறுவனம் செலுத்திய இரண்டு பங்களிப்புகளுமே அடங்கும். எவ்வாறாயினும், அவசரத் தேவைக்காகப் பணம் எடுத்தாலும் கணக்கின் மொத்த பங்களிப்பில் குறைந்தபட்சம் 25 சதவீத தொகையை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in