யாரு சாமி நீ.? இனி தப்பு பண்ண மாட்டோம்டா.. போலீஸுக்கே டஃப் கொடுக்கும் மர்ம நபர்.. மெக்சிகோவில் பைக் திருடர்களுக்கு விழும் பேட்மேன் ஸ்டைல் தண்டனை.. கதறும் திருடர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரு சாமி நீ.? இனி தப்பு பண்ண மாட்டோம்டா.. போலீஸுக்கே டஃப் கொடுக்கும் மர்ம நபர்.. மெக்சிகோவில் பைக் திருடர்களுக்கு விழும் பேட்மேன் ஸ்டைல் தண்டனை.. கதறும் திருடர்கள்..!!

Published

on

மெக்சிகோவின் ஜலிஸ்கோமாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரெனோ பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு விசித்திரமான சம்பவம் நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்களைத் திருடும் சந்தேக நபர்களை ஒரு மர்ம நபர் ரகசியமாகப் பிடித்து, பொது இடங்களில் உள்ள மின் கம்பங்களில் பிளாஸ்டிக் டேப்களால் கட்டி வைத்து விடுகிறார். ஜூன் 13 அன்று முதன்முதலாக ஒரு நபர் இதுபோல மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்ததை மக்கள் பார்த்தனர். அதன் பிறகு ஜூன் 17, ஜூன் 19 என அடுத்தடுத்து இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதுபோல பொது இடங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கட்டி வைக்கப்படும் நபர்களுக்கு அருகில் ஒரு அட்டைப் பெட்டித் துண்டில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டிருக்கும். அதில், “நான் மோட்டார் சைக்கிள்களைத் திருடுபவன்” என்பது போன்ற அவர்களின் குற்றங்கள் மற்றும் எச்சரிக்கைகள் எழுதப்பட்டிருக்கும். சினிமா பாணியில் குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து தண்டிக்கும் இந்த மர்ம நபரின் செயல்கள் அடங்கிய வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. இதனால் இணையவாசிகள் அந்த மர்ம நபரை வேடிக்கையாக ‘மெக்சிகோவின் பேட்மேன்’ என்று அழைத்து, நிஜ உலக ஹீரோவாகக் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

https://x.com/DavidJHarrisJr/status/2069914716554551649?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2069914716554551649%7Ctwgr%5E9d9f9d5ffbab435f77d417e1d5fe924c56e4fabf%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.tv9hindi.com%2Ftrending%2Fmystery-batman-leaves-warning-notes-beside-alleged-motorcycle-thieves-in-mexico-3839855.html

Advertisement

பொதுமக்கள் இந்தச் செயலைப் பாராட்டி வந்தாலும், உள்ளூர் காவல்துறையும் அரசாங்கமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜலிஸ்கோ மாகாண அரசு வழக்கறிஞர் சால்வடார் கோன்சலஸ் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எழுதப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இப்போதைக்கு உண்மை என்று நம்ப முடியாது; விசாரணைக்கு பிறகே அது தெரியவரும். சட்டத்தைக் கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை” என்று எச்சரித்துள்ளார். திருடர்கள் என்று கூறப்படும் நபர்களை தற்போது பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி, இந்தச் செயலைச் செய்து வரும் மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in