“தொட்டவங்களை சும்மா விட மாட்டேன்” திமுகவுக்கு எதிராக சட்டையை சுழற்றும் CM விஜய்… தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தொட்டவங்களை சும்மா விட மாட்டேன்” திமுகவுக்கு எதிராக சட்டையை சுழற்றும் CM விஜய்… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

தமிழக வெற்றிக் கழக அரசு, எதிர்க்கட்சியான திமுகவின் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து அடுத்தடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சி மாறப் பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுகவின் முக்கியப் புள்ளியான செந்தில் பாலாஜி தற்போது தலைமறைவாகியுள்ளார்.

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அதிரடி நகர்வுகளுக்கு மத்தியில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்திற்குள் திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் சிக்கியுள்ளார். இவ்வாறு திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான பிடி இறுகி வருவது, முதலமைச்சர் விஜய் திமுகவிற்கு எதிராகத் தனது அரசியல் சாட்டையைச் சுழற்றத் தொடங்கியுள்ளதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in