LATEST NEWS
அதிர்ச்சி.! ஜோசப் விஜய் ஆட்சியில் லஞ்சம்..? கோயில் பணிக்கு சிபாரிசு… வெளியான ஷாக்கிங்க் ரிப்போர்ட்.!!
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழல், லஞ்சம் மற்றும் சிபாரிசு ஆகியவற்றுக்கு இடமிருக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையிலேயே ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது அதற்கு முற்றிலும் மாறாக, கோயில் அறங்காவலர் பணிகளுக்குத் தவெக தரப்பிலேயே முறைகேடாக ஒரு பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தனியார் நாளிதழ் ஒன்று ஷாக்கிங் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
இக்கோயில் அறங்காவலர் பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், பின்னணியில் தவெக நிர்வாகிகள் முறைகேடாகத் தங்களுக்கு வேண்டியவர்களைச் சிபாரிசு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தனது கொள்கைக்கு எதிராகத் தனது சொந்தக் கட்சியினரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக எழுந்துள்ள இந்த விவகாரத்தில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சரான விஜய் கடுமையான நடவடிக்கை எடுப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
