அதிர்ச்சி..! அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்டியில் தீப்பற்றியதால் பரபரப்பு.. நடந்தது என்ன..? வைரலாகும் பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதிர்ச்சி..! அதிமுக எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்டியில் தீப்பற்றியதால் பரபரப்பு.. நடந்தது என்ன..? வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய குளங்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்தத் தொடக்க விழாவில் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

அப்போது பூஜையின் போது ஏற்றப்பட்ட கற்பூரத்தின் தீ, எதிர்பாராதவிதமாக அவரது வேட்டியில் பட்டு திடீரெனப் பற்றி எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள், உடனடியாகச் செயல்பட்டு தீயை அணைத்ததால் அவர் எவ்விதக் காயமுமின்றி நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இந்த எதிர்பாராத விபத்து சம்பவ இடத்திலிருந்தவர்களிடையே சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in