BIG BREAKING: கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்.. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG BREAKING: கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்.. சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

Published

on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு விவகாரங்கள் தொடர்பாக நாடு முழுவதும் வெடித்த மாபெரும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த சில வாரங்களாக, எதிர்க்கட்சிகள் மற்றும் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) போன்ற பல்வேறு மாணவர் அமைப்புகள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் தீவிரமாக நடத்தி வந்தன. கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி அழுத்தங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில், அவர் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பிரதமருக்கு எழுதியுள்ள அந்த கடிதத்தில், நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் கல்வி சீர்திருத்தங்களுக்காகத் தமது பொதுவாழ்வில் சுமார் 40 ஆண்டுகாலம் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இந்த விவகாரத்தைச் சுயநல தேசவிரோத சக்திகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்து, மாணவர்கள் தங்கள் படிப்பில் மீண்டும் கவனம் செலுத்துவதை உறுதி செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் 16 மெட்ரோ நிலையங்கள் மூடப்படும் அளவிற்குப் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், இந்த ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in