LATEST NEWS
“அரசியலில் இருந்து விலகுகிறேன்..!” பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு… தமிழக அரசியலையே உலுக்கிய பரபரப்பு..!!
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது 88-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் இனி அரசியல் துறவறம் மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று முதல் அரசியல் சார்ந்த எந்த ஒரு கருத்துக்களையும் பேசப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும், பாமகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அரசியல் செயல்பாடுகளில் இனி தலையிடப் போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் அனைத்துப் பணிகளையும் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளையும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முழுமையாகப் பார்த்துக்கொள்வார் என்று தெரிவித்தார். கட்சித் தொண்டர்களும் தன்னைப் பார்க்க விரும்பும் நபர்களும் எப்போதும் போலத் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து சந்திக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ராமதாஸின் இந்தத் திடீர் அரசியல் ஓய்வு அறிவிப்பு, பாமக தொண்டர்களிடையேயும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
