LATEST NEWS
பெரும் பரபரப்பு..! அங்கன்வாடி பெண் ஊழியரை சாதி ரீதியாக திட்டிய தவெக பிரமுகர்.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீஸ் வழக்குப்பதிவு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள ஒரு அங்கன்வாடி மையத்திற்குள், ஆய்வு என்ற பெயரில் நுழைந்த நபர் ஒருவர் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரை சாதிப் பெயரைக் கூறி தரக்குறைவாக திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் அளித்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய இணை செயலாளரான பிரபுராஜ் என்பவர் மீது வடபொன்பரப்பி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அங்கன்வாடி ஊழியரை சாதி ரீதியாக இழிவுபடுத்திய குற்றத்திற்காக, பிரபுராஜ் மீது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் கடுமையான பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அல்லது குற்றம் சாட்டப்பட்ட பிரபுராஜிடம் இந்த சம்பவம் குறித்து வடபொன்பர
