LATEST NEWS
காலையில் கைது.. நள்ளிரவில் ரிலீஸ்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதில் இரவோடு இரவாக நடந்த அதிரடி திருப்பம்..!!
முதலமைச்சர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நள்ளிரவில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை மறுத்ததைத் தொடர்ந்து, நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரிடம் காவல்துறையினர் சுமார் 6 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நள்ளிரவில் நீதிமன்ற நடுவர் முன்பாக அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நடுவர், அவருக்கு நள்ளிரவிலேயே ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இந்த அதிரடித் திருப்பம், தவெக மற்றும் திமுக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய மிக முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
