மீண்டும் போர்..! பேராபத்து சதித்திட்டத்தை தீட்டும் ஈரான்… “அந்த 2 பேரை கொலை செய்ய திட்டம்” அமெரிக்கா பரபரப்பு எச்சரிக்கை…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மீண்டும் போர்..! பேராபத்து சதித்திட்டத்தை தீட்டும் ஈரான்… “அந்த 2 பேரை கொலை செய்ய திட்டம்” அமெரிக்கா பரபரப்பு எச்சரிக்கை…!!

Published

on

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த 4 மாத காலப் போர், கடந்த வாரம் எட்டப்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முதற்கட்ட நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கத்தார் நாட்டின் தோஹாவிலும் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ரகசியமாகச் சந்தித்துப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்ரேல் ஒரு பேராபத்தான சதித்திட்டத்தைத் தீட்டி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாஷிங்க்டன் போஸ்ட் நாளேடு வெளியிட்டுள்ள பரபரப்பான அறிக்கையின்படி, ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள 2 முக்கியப் பிரதிநிதிகளைப் படுகொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்கப் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள இந்தச் செய்தியில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் ஆகிய இருவருமே இஸ்ரேலின் முதன்மை இலக்காகக் குறிவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உயர்மட்டத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டால், அது இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலும் முடக்கி, மீண்டும் போரைத் தீவிரப்படுத்திவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இதனால், இந்தத் திட்டமிட்ட சதிவலை குறித்து மத்தியஸ்தர்கள் மூலமாக ஈரானுக்கு அமெரிக்கா தனிப்பட்ட முறையில் அவசர எச்சரிக்கை அனுப்பியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் சர்வதேச அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்களில் தற்போது மிகப்பெரிய பதற்றத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in