ஹைக்கிங் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்…! மரணப் பிடியில் காதலி… காப்பாற்றத் துடித்த காதலர்… நதியை ரத்தக் களரியாக்கிய ராட்சச முதலை..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹைக்கிங் சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்…! மரணப் பிடியில் காதலி… காப்பாற்றத் துடித்த காதலர்… நதியை ரத்தக் களரியாக்கிய ராட்சச முதலை..!!!

Published

on

அமெரிக்காவின் ஆர்லாண்டோவைச் சேர்ந்த 31 வயதான பிரிட்னி கிளார்க் என்ற பெண், தனது காதலர் சான்ஸ் அலிசன் மற்றும் தோழியுடன் புளோரிடாவில் உள்ள ‘லிட்டில் பிக் ஈகான்’ தேசியக் காட்டுப் பகுதிக்கு மலையேற்றம் சென்றுள்ளார். அங்குள்ள ஈகான்லாகாச்சி ஆற்றில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க அவர்கள் நீரில் இறங்கியுள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர், “இங்கே முதலைகள் நடமாட்டம் அதிகம், ஜாக்கிரதையாக இருங்கள்” என்று எச்சரித்த சில நிமிடங்களிலேயே, ஆற்றின் சேற்றுப் படுக்கையிலிருந்து 13 அடி நீளமுள்ள ராட்சச முதலை ஒன்று மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து பிரிட்னியைத் தாக்கியது.

அந்த முதலையானது பிரிட்னியின் இரண்டு கைகளையும் கொடூரமாகக் கவ்விப் பிடித்து தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவளது காதலர் சான்ஸ், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் முதலையிடமிருந்து அவளை மீட்க மரணப் போராட்டம் நடத்தினார். உடனடியாக அவர் 911 அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கும் அழைத்துத் தகவல் கொடுத்தார். எனினும், முதலையின் அசுர பலத்தால் பிரிட்னியின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, அவள் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினாள்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பிரிட்னியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அதீத இரத்த இழப்பு மற்றும் கடுமையான காயங்கள் காரணமாக வழியிலேயே அவளது உயிர் பிரிந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, புளோரிடா வனவிலங்குப் பாதுகாப்பு ஆணையம் வான்வழித் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியில் இருந்த 13 அடி மற்றும் 12 அடி நீளமுள்ள இரண்டு பிரம்மாண்ட முதலைகளை வேட்டையாடிக் கொன்றது. இச்சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் சோகத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in