LATEST NEWS
நடுரோட்டில் கதறி அழுத ரிக்ஷா ஓட்டுநர்..! ஒரே ஒரு க்ளிக்கில் வண்டியை லாக் செய்யும் ஆபத்தான BAT-BMS செயலி… உடனே தடை செய்யக் கோரிக்கை..!!
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக “திர்ரி பிராங்க்” என்ற பெயரில் ஆபத்தான ஒரு விளையாட்டு வைரலாகி வருகிறது. இதில் சில குறும்புக்காரர்கள் தங்களது மொபைல் போன்களில் ‘BAT-BMS’ அல்லது ‘LOSSIGY’ போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். இந்த செயலிகளின் உதவியுடன், சாலையில் சென்றுகொண்டிருக்கும் பேட்டரி ரிக்ஷாக்களை ப்ளூடூத் வழியாகத் தங்கள் மொபைலுடன் இணைத்து, ஒரே ஒரு கிளிக்கில் அந்த ரிக்ஷாக்களின் பேட்டரியை ஆஃப் செய்து லாக் செய்து விடுகின்றனர். திடீரென வாகனம் நடுரோட்டில் நின்றுவிடுவதால் ரிக்ஷா ஓட்டுநர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடையும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்த மோசமான குறும்பு விளையாட்டால், அன்றாடப் பிழைப்பிற்காக நாள் முழுவதும் கஷ்டப்படும் ஏழை பேட்டரி ரிக்ஷா ஓட்டுநர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனம் திடீரென முடங்குவதால் அவர்களின் வாழ்வாதாரமும், வருமானமும் முடங்குவதோடு, நடுரோட்டில் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. இணையத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், இந்த செயலால் ஒரு ஏழை ரிக்ஷா ஓட்டுநர் செய்வதறியாது நடுரோட்டில் அழுத காட்சி பலரையும் கலங்க வைத்துள்ளது. மேலும், எந்த போன் செயலி மூலம் இது லாக் செய்யப்பட்டதோ, அதே செயலி மூலமாக மட்டுமே இதை மீண்டும் ஆன் செய்ய முடியும் என்பதால் ஓட்டுநர்கள் பெரும் தவிப்பிற்குள்ளாகிறார்கள்.
https://www.instagram.com/reel/DaSlEPNvhAX/?utm_source=ig_web_button_share_sheet
பொதுமக்களுக்குப் பெரும் தொல்லையாகவும், ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுவதாகவும் இருக்கும் இந்த செயலிக்கு எதிராக இணையத்தில் தற்பொழுது கடுமையான விமர்சனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன. சமூக ஊடகங்களில் பலரும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருவதுடன், கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலிகளுக்குக் குறைந்த ரேட்டிங் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் இந்த ஆபத்தான செயலியை இந்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே வலுத்து வருகிறது.
