LATEST NEWS
நொடிக்கு நொடி பரபரப்பு..! தவெகவில் இணைகிறார் புகழேந்தி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வி.பி. புகழேந்தி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் தவெகவில் தன்னை முறைப்படி இணைத்துக் கொள்ளவுள்ளார்.
கடந்த சில நாட்களாக அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மூத்த அரசியல்வாதியான புகழேந்தியும் இணைவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
