“குதிரை பேரம்னா என்னன்னே எனக்குத் தெரியாது” – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடிப் பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“குதிரை பேரம்னா என்னன்னே எனக்குத் தெரியாது” – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடிப் பதில்..!!

Published

on

தவெக அரசு அமைந்த பிறகு எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருவதற்கு, தவெக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார். குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தற்போதைய தவெக அரசுக்கு எவ்வகையிலும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக விளக்கியுள்ளார். மேலும், குதிரை பேரம் என்றால் என்னவென்றே தனக்குத் தெரியாது என்றும், புரியாத ஒன்றை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

இந்த பேச்சு தவெக அரசுக்கு எதிராக வைக்கப்படும் ஆள் பிடிப்பு மற்றும் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையனின் இந்த எதார்த்தமான மற்றும் அதிரடியான பேட்டி, தற்போது சமூக வலைதளங்களிலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in